நூலக விதிகள்

  1. புத்தகங்கள் ஒவ்வொரு தமிழ் பள்ளி நாள் அன்று கிடைக்கும்.
  2. எல்லா நிலை மாணவர்களும் புத்தகங்கள் எடுக்கலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை.
  3. ஒவ்வொரு மாணவரும் இரண்டு புத்தகங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
  4. நூலகத்தில் உள்ள புத்தகங்கள், அதன் இருப்பு (availability) மற்றும் மாணவரின் தனிக்கணக்கு (checked out / hold information) அனைத்தும் கீழ்கண்ட முகவரியில் காணலாம். https://tamilkalvi.libib.com/
  5. மாணவர்கள் புத்தகம் எடுக்கும்போது பெற்றோர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. எடுத்த புத்தகங்களின் காலவரை இரண்டு வாரங்கள், புத்தகங்கள் நிலுவையில் வைக்கவோ நீடிக்கவோ  இயலாது.
7. புத்தகங்கள் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்கள் / பெற்றோர்ருடையது. 
8. புத்தகங்கள் சேதம் அடைந்தாலோ/ தொலைந்துபோனாலோ பள்ளி நிர்வாகத்திடம் அறிவிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்ருடையது.
9. புத்தகங்கள் சேதம் அடைந்தாலோ, தொலைந்துபோனாலோ  அதற்க்குண்டான கட்டணம் வசூலிக்கப்படும்.
10. பெற்றோர்களின் மேற்பார்வை இல்லாமல் மாணவர்களை புத்தகங்கள் எடுக்க அனுமதிக்காதீர்.


                                                                                     புத்தகங்களை திருப்பி தரும் காலம் முடிந்து விட்டால்

                                                                              1.       எடுத்த புத்தகங்களின் காலவரை இரண்டு வாரங்கள் அல்லது அடுத்த தமிழ் பள்ளி.

                                                                              2.       நினைவூட்டல் மின்னஞ்சல் காலவரைக்கு முன்பாக அனுப்பப்படும்.

                                                                              3.       குறித்த காலத்தில் திருப்பித் தர தவறினால், ஒரு புத்தத்திற்கு ஒரு டாலர் வீதம் வசூலிக்கப்படும்.

                                                                              4.       புத்தகங்கள் சேதம் அடைந்தாலோ, தொலைந்துபோனாலோ  அதற்க்குண்டான கட்டணம் வசூலிக்கப்படும்.


 

Online Library Manual