"அன்பாலயம்" தமிழ்நாடு சீர்காழியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய, ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம். அதில் மிகவும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 65 குழந்தைகளை பேணி, பாதுகாத்து வருகின்றனர். இந்த இல்லத்தினை மீராபாய் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

இந்த குழந்தைகள் வசிக்க ஒரு கட்டிடத்தினை நமது தமிழ் சங்கம் முந்தைய ஈகை திருவிழாவின் மூலமாக கட்டி தந்தது அனைவருக்கும் தெரிந்ததே!

தொழில் பயிற்சி விபரங்கள்

 டாலர் - $19,000

ரூபாய் - 13 லட்சம்

மாத வருவாய் - 7500 ரூபாய்

இந்த குழந்தைகளுக்கு காகித உறை, பாய் தயாரிக்கும் தொழிற்பயிற்சி கொடுக்க, நாம் இந்த ஈகை திருவிழாவில் நிதி திரட்டுகின்றோம். வரும் நிதியில் ஒரு வைப்பு நிதி (Corpus Fund) ஆரம்பிக்கப்பட்டு, அதில் வரும் வட்டியில் தொழிற்பயிற்சி வழங்குவோர், மற்றும் சாதனங்களும் பெறப்படும்.

இந்த ஈகை திருவிழாவினை தமிழ்நாடு அறக்கட்டளையுடன் (Tamilnadu Foundation) சேர்ந்து செயல்படுகின்றோம்.

இந்த தொழிற்பயிற்சி செயலுக்கு தேவையான வைப்பு நிதி தொகை : 19,000 USD (தோராயமாக ரூ. 13 லட்சம்)
வைப்பு நிதியில் இருந்து மாதம் வரும் வட்டி : ரூ. 7500 (தோராயமாக)

 

இந்த ஈகை தொண்டில் நீங்களும் கலந்து கொண்டு உதவ வேண்டுகிறோம்.